சவுதி நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டால் நல்ல உறவு ஏற்படும்….ஈரான் அதிபர் அறிவிப்பு

தெஹரான்:

ஏமன் மீதான குண்டு வீச்சை நிறுத்த வேண்டும். இஸ்ரேலுடன் உறவை துண்டிக்க வேண்டும். இவற்றை மேற்கொண்டால் சவுதி அரேபியாவுடனான உறவை புதுப்பிக்க ஈரான் தயாராக இருப்பதாக அதிபர் ஹசன் ரவுஹனி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடன் உள்ள போலியான நட்பு மற்றும் ஏமன் மீது மனிதாபிமான முறையில் நடத்தப்படும் குண்டு வீச்சை சவுதி நிறுத்த வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தி வருகிறது. ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டு படை ஈரானின் ஹவுதீஸ் படையை எதிர்த்து போரிட்டு வருகிறது.

2016ம் ஆண்டு ஜனவரி ஈரானுடன் தூதரக உறவுகளை சவுதி முறித்துக் கொண்டது. கடந்த மாதம் ரியாத் அருகே ஹவுதீஸ் படையினர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவினர். இதனால் மேலும் பதற்றம் ஏற்பட்டது. இஸ்ரேலை சவுதி அங்கிகரிக்கவில்லை. எனினும் இரு நாடுகளுக்கும் இடையே ஈரானை எதிர்ப்பதற்கு பரிமாற்றம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.