ஈரான் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு: எம்பி-க்கள் சிறைப்பிடிப்பு

டெஹ்ரான்:

ஈரான் நாட்டு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி, எம்.பிக்களை பிணைக் கைதிகளாக சிறைபிடித்துள்ள சம்பவம் அங்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கொமெய்னி வழிபாட்டு தளத்திலும் சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில்  அமைந்துள்ள நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) காலை நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையடுத்து தொடர்ந்து மர்ம நபர்கள் மீது ம் ஈரான் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே தற்போது துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.  பயங்கரவாதிகள், சில எம்பிக்களை சிறைப்பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ள.

பாதுகாப்பு அதிகாரி ஒருவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாகவும் பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எந்த குழுவைச் சேர்ந்தவர்கள்  மற்றும் காரணம் என்ன என்பது குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு படையினர்  குவிக்கப்பட்டுள்ளனர்