டெஹ்ரான்: ஈரான் நாட்டைச் சேர்ந்த மல்யுத்த வீரர் நாவித் அப்காரி, கொலை வழக்கு ஒன்றுக்காக, உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி தூக்கிலிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் கடந்த 2018ம் ஆண்டு, தண்ணீர் விநியோகம் செய்யும் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதானார். அதேசமயம், அவர், அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காகவே கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

“குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால் சித்ரவதை செய்யப்பட்டேன்” என்ற இவரின் கூற்றை ஏற்க மறுத்த நீதிமன்றம், இவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இவரின் சகோதரர்கள் இருவருக்கும் 54 & 27 ஆண்டுகள் சிறைதண்டனை அறிவிக்கப்பட்டது.

அதேசமயம், நாவித் அப்காரியின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்று உலகெங்கும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால், அதையும் மீறி ஷிராஸ் நகரில் அத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.