நவம்பர் மாதம் ரிலீசாகும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ …!

இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.

தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு, கலை இயக்குநராக த.இராமலிங்கம், எடிட்டர் செல்வா, பாடல்கள், உமாதேவி மற்றும் தனிக்கொடி எழுதியிருக்கிறார்கள்.

இயக்குநர் அதியன் ஆதிரை, படத்தை நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி