டெக்ரான்:

ரான் தளபதி சுலைமானியின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடலுக்கு   அதி உயர் அதிபர் அயதுல்லா காமெனி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். மேலும் லட்சக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் ஈரான் நாட்டு தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தின் மீது அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்க வான்படையின் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி குவாசம் சுலைமானி உயிரிழந்தார்.

அவரது உடல் மக்களின் பார்வைக்காக ஈரான் தலைநகர் பாக்தாத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக ஈரான் கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான   ஈரான் நாட்டு மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

திறந்த வெளி ஜீப்புகளில் அவரது உடல் தலைநகர் பாக்தாத்தின் முக்கிய வீதிகளில் கொண்டு வரப்பட்டது.  இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், கருப்பு நிற உடை அணிந்துபடி, ஈராக் நாட்டின் கொடியை ஏந்திச் சென்றனர். இறுதி ஊர்வலம் பாக்தாத் நகரத்தில், மத்திய பகுதியில் இருக்கின்ற, ஹரியா சதுக்கத்தில் நிறைவடைந்தது. இறுதி ஊர்வலத்தின்போது, சாலையின் இருபுறங்களிலும் மக்கள் கூடி நின்று அவருக்கு உணர்ச்சிப்பூர்வமாக  அஞ்சலி செலுத்தினர்.

ஹரியா சதுக்கத்தில்  வைக்கப்பட்ட காசிம் சுலைமானி மற்றும் அவருடன் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் இறுதி அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். அவர்களது  உடல் வைக்கப்பட்ட  சவப்பெட்டிக்கு  பிரார்த்தனை செய்து வருகின்றன்ர.

சுலைமானி உடலுக்கு ஈரான் அதிஉயர் தலைவர் அயதுல்லா காமெனி கண்ணீர் மல்க சுலைமானி உடலுக்கு அஞ்சலி செலுத்தி னார். மேலும்,   ஈராக்கின் இடைக்கால பிரதமரான, அதெல் அப்தெல் மஹதி, முன்னாள் பிரதமர் நூரி அல் மாலிகி போன்ற பலம் வாய்ந்த ஷியா இஸ்லாமிய தலைவர்கள், ஷியா மதத்தின் குருவான, அம்மர் அல் ஹக்கீம் போன்றவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

லட்சக்கணக்கான பொதுமக்கள், ராணுவத்தினர் சுலைமானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தளபதி சுலைமானியின்  உடல் அடக்கம் நாளை அவரது சொந்த ஊரான ஹெர்மானில் நடைபெற உள்ளது.