டெஹ்ரான்: ஈரான் நாட்டின் உச்ச தலைவர் என்று அழைக்கப்படும் அயத்துல்லா சையது அலி கொமேனி, இந்தி மொழியில் டிவிட்டர் கணக்கை துவக்கியுள்ளார்.

இவர், இந்தி மட்டுமின்றி, உலகின் வேறு பல மொழிகளிலும் டிவிட்டர் கணக்கைத் துவக்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. பாரசீகம், அராபிக், உருது, பிரெஞ்சு, ஸ்பானிஷ், ரஷ்யன் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரானில், கடந்த 1979ம் ஆண்டு நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு, அங்கு இஸ்லாமிய பழமைவாத ஆட்சி ஏற்பட்டது. அதுமுதற்கொண்டு, அங்கு பிற மத சிறுபான்மையினர் மோசமாக ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.

அங்கு தேர்தல் முறையில் தலைவர்கள் தேர்வுசெய்யப்பட்டாலும், அயத்துல்லா மற்றும் கொமேனி போன்ற பட்டங்களை சுமக்கும் மதம் சார்ந்த தலைவர்களின் அதிகாரமே உச்சத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.