ஈராக்: ஒரே நாளில் 38 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

நசிரியா:

ஈராக்கில் தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்ட 38 பேருக்கு ஒரே நாளில் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈராக்கில்தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 38 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். அவர்கள் தெற்கு ஈராக்கின் நசிரியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

இந்த 38 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் சிறைச்சாலையில் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்நாட்டில் கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஒரே நாளில் 42 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அதற்கு பின்னர் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.