மக்களை பதற வைத்த ஈராக் நிலநடுக்கம்! வைரலாகும் வீடியோ

ரியாத்,

ரான் ,ஈராக் எல்லை பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக மிகப்பெரிய சேதாரம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இதுவரை  பலியானோர் எண்ணிக்கை 170ஐ தாண்டி உள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. கட்டிட இடபாடுகளை நீக்கும்போதுதான் உண்மையான விவரம் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்பட்டுள்ளது. அதில் மக்கள்  உயிரை காப்பாறற்  அலறியடித்து ஓடும் காட்சிகளும் பதிவாகி உள்ளன.

அந்த வீடியோ ஒன்றில்,  பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கேக் வைத்திருக்கும் மேசை அசையும் காட்சி, அடுக்குமாடி கட்டி டங்களில் அலங்கார மின் விளக்குகள் ஊசலாடும் காட்சி ஆகிய வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.

ஈராக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

குர்திஸ்தான் மாகாணத்தின் பெஞ்வின் என்னுமிடத்தில்  மையம் கொண்டிருந்த இந்த  பயங்கர நிலநடுக்கத்துக்கு இதுவரை 170 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள காஃபி ஷாப்பில் நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள ஓடும் காட்சி

https://www.youtube.com/watch?v=Xy5EXvgOTr4&feature=youtu.be

Credit: Media News center

https://twitter.com/MediaNewsCenter/status/929798471758090241