ஈராக்கில் பயங்கரம்: பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபல மாடல் அழகி

பாக்தாத்:

ராக்கில் பட்டப்பகலில் அடையாளம் தெரியாத நபரால் பிரபல மாடல் அழகி தாரா சுட்டுக் கொல்லப் பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பட்டப் பகலில்  தனது ஆடம்பர காரில் தாரா ஃபேர்* சென்று கொண்டிருந்தபோது, முகத்தை மூடியிருந்த அடையாளம் தெரியாதவர்களால் தாரா சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாரா ஃபேர்ஸின் மரணம் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது ஈராக்கின் உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

22 வயதான இளம் மாடல் அழகியான தாரா ஃபேர்ஸ் இஸ்லாமிய கட்டுப்பாடுகளை மீறி  மிக சுதந்திரமான வாழ்க்கை வாழ்ந்து வந்ததால், அவர் மீது இஸ்லாமிய பழமைவாதிகள் கோபம் கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாடல்அழகியான தாராஃபேர்ஸை, இன்ஸ்டாகிராமில் 27 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில்  ஸ்டைலான படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருபவர்.

தாராவின்  மரணத்துக்கு  சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களையும் இரங்கலையும் பதிவு செய்து வருகின்றனர்.