பாக்தாத் :

ரான் மீது அமெரிக்கா இன்று மீண்டும்  தாக்குதல் நடத்திஉள்ளது. கிளர்ச்சியாளர்களை அடக்கவே இந்த தாக்குதல் என்று தகவல் வெளியானது. ஆனால், இதற்கு அமெரிக்கா, ஈராக் கூட்டுப்படை மறுப்பு தெரிவித்து உள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகம் மூலம் உலகின் மிகமுக்கிய பொருளாதார நாடாக இருந்த ஈரான், இன்று கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா என்பது அனைவரும் அறிந்ததே.

ஈரானின் எண்ணை வளத்தை குறிவைத்து, 1953 ஆண்டு முதல் ஈரான் அரசியலில் அமெரிக்கா தலையிட்டு வருகிறது.  ஈரான் நாட்டில் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடத்திவந்த பிரதமர் முகமது மோசாதக், ஈரான் நாட்டில் இருந்த எண்ணெய் கிணறுகளை அரசுடைமையாக்க முயற்சிகள் மேற்கொண்டார். இதனை பிடிக்காத அமெரிக்காவும், பிரிட்டனும் சேர்ந்து அவரது ஆட்சியை கவிழ்த்து, தங்களுக்கு சாதகமான முகமது ராசா பெஹல்வியை முழு அதிகாரத்துடன் ஆட்சியில் அமர்த்தியது.

இதற்கு எதிராக 1979 ஆம் ஆண்டு வெடித்த மக்கள் புரட்சி ஈரான் நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்தது. ஈரானின் மதத் தலைவரான ஹையத்துல்லா காமெனி அந்நாட்டின் முக்கிய தலைவரானார்.

இந்த புரட்சியின்போது, ஏராளமான அமெரிக்கர்கள் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டு ஈரான் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் அடைக்கப்பட்டனர். இதன் காரணமாக ஈரான் அமெரிக்கா இடையேயான உறவு மேலும் பற்றியெரியத் தொடங்கியது. ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்க ஏற்படுத்தியும், ஈரானின் பக்கத்து நாடான ஈராக் நாட்டினருடன் இணைந்தும் தொல்லை கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம்  ஈரான் பாதுகாப்புப் படை தளபதி குவாசிம் சொலைமானியை அமெரிக்கப் படைகள் குண்டு வீசி கொன்றன. இந்த சம்பவம், ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதலை உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், இன்று மேலும் ஒரு தாக்குதலை அமெரிக்கா நடத்தி உள்ளது. ஈராக் கிளர்ச்சியாளர் ராணுவப் படைத் தளபதியை குறிவைத்து அமெரிக்கா இன்று அதிகாலை பாக்தாக் அருகே வான்வழித் தாக்குதல் நிகழ்த்தியது.

ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு மேற்கே ஈரான் ஆதரவில் செயல்பட்டுவரும் கிளர்ச்சியாளர்கள் சென்ற இரண்டு கார்கள் மீது இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவுல் இதில் பலர் உயிரிழந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், இந்த தாக்குதலை நடத்தவில்லை என்று அமெரிக்கா, ஈராக் கூட்டுப்படை மறுப்பு தெரிவித்து உள்ளது.