சாப்பாட்டு தட்டு பிரச்னை: நடுவானில் மோதலில் ஈடுபட்ட 2 விமானிகள் சஸ்பெண்ட்

பாக்தாத்

ஈரானின் மாஷாத் நகரில் இருந்து ஈராக் தலைநகர் பாக்தாதுக்கு 157 பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது துணை விமானி தனக்கு உணவு எடுத்து வருமாறு பணிப்பெண் ஒருவரிடம் கூறினார். இதை விமானி தடுத்துள்ளார்.

சாப்பாடு தட்டு தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. விமானியே தனது உணவையும் சாப்பிட்டுவிட்டதாக துணை விமானி தெரிவித்துள்ளார். பாக்தாத் நகரில் விமானம் தரையிறங்கிய பின்னரும் இருவருக்கும் இடையே வாக்குவாதத்தில் நீடித்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்த போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.