ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது அந்நாட்டின் சார்பில் ஏவுகனை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஈரானிய ஜெனரல் காஸ்ஸெம் சுலைமானி கொல்லப்பட்டார். இதை அந்நாட்டு அதிபர் உறுதி செய்த நிலையில், இது தொடர்பாக ஈராக்கிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும், அமெரிக்க படைகளை தீவிரவாதிகள் என்றும் விமர்சித்து, அந்நாட்டு அரசு நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

இத்தகைய சூழலில் இன்று காலை ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீதும், கூட்டணி துருப்புகள் மீதும் ஈரான் அரசு தரப்பில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு படை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில், ஈராக் நாட்டின் இந்த திடீர் தாக்குதலால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.