திருப்பதி

ஆர் சி டி சி எனப்படும் இந்திய ரயில்வே சுற்றுலா உணவுக் கழகம் ஒரு  நாள் சுற்றுலாவாகத் திருப்பதி கோவில் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய ரயில்வே சுற்றுலா உணவுக் கழகம் நாடெங்கும் ரயில் மூலம் பல சுற்றுலாக்களை நடத்தி வருகிறது.   இந்த அமைப்பின் மூலம் சுற்றுலா செல்வது பாதுகாப்பாகவும் சவுகரியமாகவும் உள்ளதாகப் பலரும்  புகழ்ந்து வருகின்றனர்.  இதில் பல புனிதத் தலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் தற்போது திருப்பதி ஏழுமலையான் தரிசன சுற்றுலாவை ஐ ஆர் சி டி சி அறிமுகம் செய்துள்ளது.   இது ஒரு நாள் சுற்றுலாவாகும்.  இந்த சுற்றுலாவுக்கு ‘டிவைன் பாலாஜி தரிசனம்’ என பெயரிடப்பட்டுள்ளது.  இதற்கு நபர் ஒருவருக்கு ரூ.900 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதன்படி நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் தங்கள் சொந்த செலவில் காலை 8 மணிக்குள் பக்தர்கள் ரயில் மூலம் திருப்பதியில் வந்து இறங்க வேண்டும்.  அதன்பிறகு ஐ ஆர் சி டி சி இவர்களை வரவேற்று திருச்சானுர் பத்மாவதி தாயார் தரிசனம், ஏழுமலையான் தரிசனம் ஆகியவற்றை முடித்துக் கொண்டு மீண்டும் அதே நாள் மாலை அல்லது இரவு ஊருக்கு அனுப்பி வைக்கும்.