ஐஆர்சிடிசி நில மோசடி: லாலுவின் மனைவி, மகனுக்கு டில்லி நீதிமன்றம் ஜாமின்

டில்லி:

ஆர்சிடிசி நிலம் தொடர்பான முறைகேடு வழக்கில் லாலுவின் மனைவி மற்றும் மகனுக்கு ஜாமீன் வழங்கியும், லாலுவை வரும் 6ந்தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டும் வழக்கை  ஒத்தி வைத்துள்ளது.

மாட்டுத்தீவன வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள  ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது,  ரெயில்வேயின் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு ஐஆர்சிடிசி ஓட்டல்களைப் பராமரிக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தங்களை அளிக்க,  பாட்னாவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை லாலு பிரசாத் யாதவ் பெற்றுக் கொண்டதாகவும் புகார் கூறப்பட்டது

இதுதொடர்பான வழக்கு கடந்த 2016ம் ஆண்டு பதியப்பட்டது. இது தொடர்பாக  லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் ராப்ரி தேவி, அவர்களது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது சிபிஐ விசாரணை நடத்தி கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் உள்பட  குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீன் கோரி பாட்டியாலா  சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதனை பரிசீலித்த பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம், தலா ரூ.1 லட்சம் செலுத்தி ஜாமினில் செல்லலாம்  என்று  ராப்ரிதேவி, தேஜஸ்வி உள்பட  அனைவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதேசமயம், லாலு பிரசாத் யாதவை அக்டோபர் 6-ம் தேதி வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தும்படி வாரண்டு பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தது.

You may have missed