சென்னை:
கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்சேவை நாளை முதல்  சில சேவைகள் தொடங்கு வதாகவும், அதற்கான முன்பதிவு   இன்று மாலை தொடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 4மணிக்கு முன்பு தொடங்கியது. ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே இணையதளம் முடங்கியது. இதையடுத்து மாலை 6 மணிக்கு மீண்டும் முன்பதிவு தொடங்கியது.

மே 12ந்தேதி முதல் நாடு முழுவதும் படிபப்டிபயாக ரயில்சேவை தொடங்கப்படும் என அறிவித்த ரயில்வே  முதல் கட்டமாக டில்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களுக்குசேவை தொடங்க உள்ளது.
இதற்கான முன்பதிவு இணையதளத்தில் மட்டுமே செய்ய முடியும்.  ரயில் நிலையங்களில் பயணச் சீட்டு பெற முடியாது. இதன் காரணமாக முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இணையதளம் முடங்கியது. இதனால் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து மாலை 6 மணிக்கு மீண்டும் முன்பதிவு தொடங்கியது.
இந்த நிலையில்,  இந்தியன்  ரயில்வே முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்கும் முகவர்கள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.
அதிகபட்சமாக 7 நாட்களுக்கு முன்பு வரை ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
உறுதியான ரயில் டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
ஆர்ஏசி மற்றும் காத்திருப்பு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது.
ரயிலில் ஏறிய பிறகு டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட் பெறும் முறையும் அனுமதிக்கப்படாது.
ரயில் டிக்கெட்டை ரத்து செய்வதற்கு, ரயில் புறப்பட 24 மணி நேரம் முன்பு வரை அனுமதிக்கப்படும்.
ரயில் டிக்கெட் ரத்துக் கட்டணமாக 50% கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
பரிசோதனைகள் செய்வதற்கு ஏதுவாக, பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்கள் முன்பே ரயில் நிலையத்துக்கு வந்து விட வேண்டும்.
தற்போது இயக்கப்படும் அனைத்து சிறப்பு ரயில்களும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளாகவே இருக்கும்.
சாதாரண காலங்களில் இயக்கப்படும் ராஜ்தானி விரைவு ரயிலின் கட்டணம் இதற்குப் பொருந்தும்.
அனைத்துப் பயணிகளும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுரை வழங்கப்படுகிறது.
பயணிகள் அனைவரும் தங்களுக்குத் தேவையான போர்வைகள், உணவு, குடிநீர் போன்றவற்றை எடுத்து வர வேண்டும்.
ரயிலில் கட்டணத்துக்கு ஏற்ப உலர்ந்த மற்றும் சாப்பிடத் தயாராக இருக்கும் உணவு, குடிநீர் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.