மூன்றாம் தரப்பு காப்பீட்டு பிரீமியத் தொகையை உயர்த்திய இர்டாய்

புதுடெல்லி: இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், மூன்றாம் தரப்புக்கான பிரீமியத் தொகையை இந்தாண்டு உயர்த்தி அறிவித்துள்ளது.

கார்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் ஆகியவற்றுக்கான பிரீமியத் தொகை உயர்த்தப்பட்டுள்ளன.

இந்தப் புதிய அறிவிப்பின்படி, 1000 சிசி திறனுக்கு குறைவான கார்களுக்கான தொகை ரூ.1,850 லிருந்து ரூ.2,120 என்பதாக உயர்ந்துள்ளது.

மேலும், 1000 சிசி – 1500 சிசி திறன் கொண்ட கார்களுக்கு ரூ.2,863 என்பதிலிருந்து, ரூ.3,300 என்பதாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேசமயம், சொகுசு கார்களுக்கான பிரீமியம் ரூ.7,890 என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.

பொதுவாக, ஏப்ரல் 1 முதல் மூன்றாம் தரப்பு காப்பீட்டு பிரீமியம் தொகை மாற்றப்படும். ஆனால், இந்தமுறை சற்று தாமதமாகியுள்ளது. இந்தப் புதிய மாற்றங்கள் குறித்து வரும் 29ம் தேதி வரை தமது கருத்துக்களை தெரிவிக்குமாறு பங்குதாரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.