3வது ஒருநாள் போட்டி – இங்கிலாந்தை அட்டகாசமாக வென்ற அயர்லாந்து!

லண்டன்: ஒருநாள் தொடரை இழந்துவிட்டாலும், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது & கடைசி ஒருநாள் போட்டியில் மிக அசத்தலாக ஆடி, 328 ரன்களை எளிதாக சேஸ் செய்து வென்றது அயர்லாந்து அணி.

இங்கிலாந்து சென்ற அயர்லாந்து அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது.

முதல் இரண்டு போட்டிகளை இங்கிலாந்து வென்று, தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில், மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி, முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 328 ரன்களை குவித்துவிட்டது. அந்த அணியின் மோர்கன் 106 ரன்களும், டாம் பேன்டன் 58 ரன்களும், வைலி 51 ரன்களையும் அடித்தனர். 49.5 ஓவர்களில் அந்த அணி 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

அயர்லாந்து தரப்பில் கிரெய்க் யங் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ்வா லிட்டில் & கேம்பர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியில், அயர்லாந்து அணி நிச்சயம் தேறாது என்று நினைத்தவர்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. மிகப்பெரிய இலக்கை நோக்கிய ஆடிய அயர்லாந்து அணியின் ‍துவக்க வீரர் பால் ஸ்டர்லிங் 128 பந்துகளில் 142 ரன்களை விளாசினார்.

ஆன்ட்ரூ பால்பிரின் 113 ரன்களை வெளுத்தார். இறுதியில், அதே 49.5 ஓவர்களில் மொத்தம் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 329 ரன்களை எடுத்து பெரிய கெளரவ வெற்றியைப் பெற்றது அயர்லாந்து அணி!

கார்ட்டூன் கேலரி