அயர்லாந்து வெற்றியை தொடர்ந்து இங்கிலாந்துடன் மோத வீரர்கள் தயார் – கோலி

அயர்லாந்து உடனான டி20 போட்டிகளில் இந்தியா அபார வெற்றிப்பெற்றதை தொடர்ந்து இங்கிலாந்துடன் மோத வீரர்கள் தயாராக இருப்பதாக கேப்டன் கோலி கூறியுள்ளார். செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தில் நடைப்பெற உள்ள சர்வதேச டி20 போட்டிகளை எதிர்க்கொள்ள இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர்.
Virat
அயர்லாதுக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை இந்தியா எடுத்தது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது நாள் போட்டியில் 12வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றிய இந்திய அணி 143 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து அடுத்த வாரம் நடைபெற உள்ள இங்கிலாந்து உடனான டி20 போட்டிகளில் பங்கேற்க வீரர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். அயர்லாந்து உடனான இரண்டு போட்டிகளில் 200க்கு மேல் ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றிப்பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கோலி கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் 21 விக்கெட்டுகளை எடுத்த சித்தார்த் கவுல் இந்த டி20 போட்டியில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார். குல்தீப் யாதவ் மற்றும் யுவேந்திர சாஹல் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினர். கே.எல்.ராகுல் முதல் போட்டியில் 36 பந்துக்களுக்கு 70 ரன்களையும், சுரேஷ் ரெய்னா 45பந்துகளுக்கு அதிகபட்சமாக 69 ரஙளையும் எடுத்தனர்.

அடுத்து இங்கிலாந்தில் நடைப்பெற உள்ள டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்போது இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். ”அயர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் அனைத்து வீரர்களும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் வீரர்கள் தங்கள் பலத்தை நிரூபித்துள்ளனர். இந்த போட்டிகளில் இளம் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது பாராட்டக்கூடியதாக இருந்தது” என்று கோலி தெரிவித்தார்.