மும்பை: நீண்ட நாட்கள் ஓய்வு மற்றும் சரியான பயிற்சியின்மை காரணமாக, கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் துவங்கும்போது பந்துவீச்சாளர்கள் காயம் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான்.

தொடர் ஊரடங்கு காரணமாக, இந்தியப் பந்துவீச்சாளர்கள் பலர் வீட்டிலேயே முடங்கியிருந்தனர். தற்போதைய தளர்வில், தங்கள் வீட்டிற்கு அருகேயிருக்கும் மைதானத்திற்கு சென்று கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனயைடுத்து, பல வேகப்பந்து வீச்சாளர்கள் வீட்டுக்கு அருகேயுள்ள மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இர்ஃபான் பதான் கூறியுள்ளதாவது, “பந்து வீச்சாளர்கள் சரியான முறையில் செயல்பட்டு காயம் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பல நாட்கள் ஓய்வில் இருக்கும் காரணத்தால், மீண்டும் போட்டிகள் துவங்குகையில், பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்படாத வகையில் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.

ஒவ்வொரு அணியிலும் 4 முதல் 6 பந்துவீச்சாளர்கள் வரை இருப்பர். எனவே, அனைவரின் மீதும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வ‍ேண்டும்” என்றார் பதான்.