‘இருளன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு….!

இயக்குனர் சூர்யா பிரபு இயக்கத்தில் அஃலைவன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘இருளன்’ .

முற்றிலும் இளம் நடிகர்களுடன் இந்த படத்தினை இயக்குனர் இயக்குகிறார். இதன் போஸ்டரை இன்று மாரி பட இயக்குனரான பாலாஜி மோகன் வெளியிட்டார்.

இந்த படம் குறித்து படக்குழு கூறுகையில் ” உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இரண்டு முகங்கள் இருக்கும். வெளியுலகில் மற்றவர்களுக்கு முன்பாக ஒரு முகமும் தனக்குள்ளே வேறு ஒரு முகமும் இருக்கும். தன்னை வெளிக்கொண்டு வருவதே இந்த திரைப்படம். என தெரிவித்தனர்.