டிசம்பர் 6-ம் தேதி வெளியாகிறது சுந்தர்.சி-ன் ‘இருட்டு’…!

வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர்.சி, தன்ஷிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘இருட்டு’.

இந்தப் படத்தின் வெளியீடு உரிமையைக் கைப்பற்றியுள்ள ஸ்கிரீன் சீன் நிறுவனம் அக்டோபர் 11-ம் தேதி ‘இருட்டு’ வெளியாகும் என்றது. ஆனால், திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.

இந்நிலையில் முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.