அணில் அம்பானியின் நிறுவனத்திற்கு ரூ.90,000 கோடி கடனா?

மும்பை: அணில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்காக கடன் கொடுத்தவர்கள் கேட்கும் தொகை ரூ.90,000 கோடி வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தொகை, தனது கடனாக அந்த நிறுவனம் குறித்து வைத்துள்ளதைவிட, இருமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அணில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷ்ன்ஸ் நிறுவனம் திவாலாகிறது என்ற விஷயம் நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றே.

இந்திய மற்றும் சர்வதேச வங்கிகள், அரசு உள்ளிட்ட இதர கடன் வழங்கும் அமைப்புகள், மொபைல் ஃபோன் நிறுவனங்கள் மற்றும் டெலிகாம் கோபுர நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள், அணில் அம்பானியின் நிறுவனத்திடமிருந்து தங்களுக்கு வரவேண்டிய கடன் தொகை விபரங்களை சமர்ப்பிக்கத் தொடங்கிவிட்டன.

தங்களுக்கு சேர வேண்டிய கடன்தொகை குறித்து குறிப்பிட்டு தகவல் அனுப்புவதற்கு மே 21ம் தேதிதான் கடைசி நாள்.

மொத்தமாக குறிப்பிடப்படும் தொகை ரூ.75,000 கோடி முதல் ரூ.90,000 கோடி வரை இருக்கலாம் என்றும், சமயத்தில், அதைவிட அதிகமாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.