பிரபல நடிகர் ரிஷிகபூர் மகன், மகளுக்கு கொரோனா தொற்று? நெட்டில் தகவல் பரவியதால் பரபரப்பு..

டிகர் அமிதாப் பச்சன் மகன்அபிஷேக் பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதியானதாக தகவல் வெளி யானவுடன், பாலிவுட்டில் மறைந்த ரிஷிகபூர் குடும்பத்துக்கு கொரோனா தொற்று உறுதியானதாக சிலர் நெட்டில் பகிர்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


ரிஷிகபூரின் மகன் ரன்பிர் கபூர் பாலிவுட்டில் இளம் நடிகர் களில் ஒருவராக இருக்கிறார். தாயார் நீட்டு கபூரும் மற்றும் வெளிநாட்டிலிருந்த வந்த அவரது ரன்பீருன் சகோதரி ரித்திமா என அனைவரும் ஒன்றாக இருக்கின்றனர். குடும்பத்தினரை பற்றி வதந்தி பரவியதை யடுத்து ரித்திமா தனது இன்ஸ்டா கிராமில் விளக்கம் அளித்தார்.
‘வதந்திகள் பரப்புவதை நிறுத்துங்கள் எங்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. தகவல் வெளியிடுவதற்கு முன் அது உண்மைதானா என்பதை உறுதி செய்து சொல்லுங்கள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நாங்கள் மூவரும் நலமுடன் ஃபிட்டாக இருக்கிறோம் ‘ என் ரித்திமா தெரிவித் திருக்கிறார்.
நடிகர் ரிஷிகபூர் கடந்த 2 வருடமாக கேன்சர் நோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார். சென்ற ஏப்ரல் இறுதியில் அவர் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை யிலிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.