நடிகர் வடிவேலு தலைமறைவு?

பண மோசடி விவகாரத்தில் நடிகர் வடிவேலு தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2015ம் ஆண்டு யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு நாயகனாக நடித்து வெளியான படம் எலி.  பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம், தோல்வி அடைந்தது. இதையடுத்து பணப்பிரச்சினைகள் வெடித்தன.

 

 

இப்படத்தின் செலவுக்களுக்காக தயாரிப்பாளர் சதீஷ், ராம்குமார் என்பவரிடம் 1.5 கோடி ரூபாய் கடன் அளித்திருந்தார். படம் படுதோல்வி அடைந்ததால் தயாரிப்பாளர் சதீஷினால் கடனாக பெற்ற 1.5 கோடியை திருப்பித்தர முடியவில்லை. வட்டியுடன் சேர்த்து 2 கோடி ரூபாய் அளவுக்கு தொ  கை உயர்ந்தது.

 

தயாரிப்பாளர் சதீஷூக்கு, நடிகர் வடிவேலு உத்திரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பைனான்சியர் ராம்குமாரிடம், வடிவேலுவிடம் வாங்கிக்கொள்ளும்படி தயாரிப்பாளர் சதீஷ் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் வடிவேலு மற்றும் சதீஷ் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார் பைனான்சியர் ராம்குமார்.

சதீஷ்

இந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் தயாரிப்பாளர் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள நடிகர் வடிவேலு,   தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபகாலமாக மதுரையில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த வடிவேலு, நேற்றிலிருந்து வீட்டில் இல்லை என்றும் அவர் எங்கு சென்றார் என்பது குறித்து குடும்பத்தினரும் ஏதும் சொல்ல மறுப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்தே வடிவேலு தலைமறைவாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.