நண்பருக்கும், சுஷாந்த் காதலிக்கும் மோதல்.. தற்கொலைக்கு இதுதான் காரணமா?

எம்.எஸ். தோனி-தி அன்டோல்ட் ஸ்டோரி’, ‘கை போ சே’, ‘சிச்சோர்’, படங்களின் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சுஷாந்த்தை பெரிய பட நிறுவனம் ஒன்று பல படங்களுக்கு ஒப்பந்தம் செய்து வைத்துக் கொண்டு அவரைவேறு படங்களில் நடிக்க விடாமல் செய்து மிரட்டி வந்தது இதனால் 7 பட வாய்ய்புகளை அவர் இழந்தார். அதில் அவர் மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது, பின்னர் வாரிசு நடிகர்கள் கூட்டணி அமைத்துகொண்டு அவரை ஓரங்கட்டி னார்கள் என்றும் கூறப்படுகிறது. காதலி ரியா கைவிட்டு சென்றதுதான் தற்கொலைக்கு காரணம் என வேறொரு தரப்பு சொல்கிறது.
தற்போது சுஷாந்த் காதலி ரியா சக்ரவர்த்திக்கும் சுஷாந்த்தின் நெருங்கிய நண்பர் சித்தார்த் பிதானிக்கும் இடையே மோதல் இருந்தது. சுஷாந்த்துடன் ரியா பழகுவதை சித்தார்த் தடுத்ததாகவும் இதனால் நான் வேண்டுமா? உன் நண்பர் வேண்டுமா? நீயே முடிவு செய்துகொள் என்று சுஷாந்த்திடம் கோபமாக கூறிவிட்டு ரியா பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மனவேதனை அடைந்து சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என்று புதிதாக தகவல் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை சுஷாந்த்தின் தற்கொலை குறித்து முழுமையான போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வராத நிலையில் போலீசார் தங்களது விசாரணையில் வேகம் காட்டமல் உள்ளனர். விசாரணை தீவிரம் அடையும்போது பல்வேறு விவகாரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.