சோனியா அகர்வால் 2வது திருமணமா? தாலி, மோதிரம் வெளியிட்டார்..

காதல் கொண் டேன், ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே உள் ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சோனியா அகர்வால். இவருக்கும் டைரக்டர் செல்வராகவனுக்கும் கடந்த 2006 ஆண்டு திருமணம் நடந்த்து பின்னர் கருத்து வேறுபாடு காரணாமாக விவாகரத்து பெற்றனர்.


சோனியா அகர்வால் தனது இணைய தள பக்கத்தில் தாலிகட்டு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதை தொடர்ந்து இரண்டு மோதிரங்கள் படம் வெளியிட்டார். இதுபற்றிய அறிவிப்புக்கு இரண்டு நாட்கள் காத்தி ருக்கும்படி மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். சோனியா அகர்வால் தனது திருமண அறிவிப்பை 2 நாட் களில் வெளி யிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த் துக்கொண்டிருக்கும் நிலையில் இது ஏதாவது அவர் நடிக்கும் ஒரு சீரியல் அல்லது படத்தின் புரமோஷனுக்கான புரமோஷன் டெக்னிக்காக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 2 நாட்களில் இதற்கான விடை தெரிந்து விடும்.