கமல் கட்சியில் இருந்து நடிகை ஸ்ரீப்ரியாவும் விலகல்?

டிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்  கட்சியில் முக்கிய பிரமுகரான வழக்கறிஞர் ராஜசேகர் விலகிய சூழலில், நடிகை ஸ்ரீப்ரியாவும் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்ரீப்ரியா – கமல் ( அன்றும் இன்றும்)

சமீபத்தில் கட்சி துவங்கிய கமல்ஹாசன், கட்சியை வழி நடத்த 16 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவை அமைத்தார். இதில் நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர் நாசரின் மனைவி கமீலா, வழக்கறிஞர் ராஜசேகர் உள்ளிட்டோர் இருந்தனர்.

வழக்கறிஞர் மூலமாக முன்னாள் காவல் அதிகாரி மவுரியா, ஸ்டார் ஜெராக்ஸ் சௌரிராஜன் உட்பட பலர் கமல் கட்சியில் சேர்ந்தனர்.

இந்த நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக வழக்கறிஞர் ராஜசேகர் மக்கள் நீதி மய்ய கட்சியில் இருந்து விலகிவிட்டார்.

இந்த நிலையில் உயர் மட்டக்குழுவில் இருக்கும் நடிகை ஸ்ரீப்ரியாவும், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கமலுடன் பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ரீபிரியா. இருவரும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள்.  இளமை ஊஞ்சலாடுகிறது, எனக்குள் ஒருவன், வாழ்வே மாயம், நீயா, சிம்லா ஸ்பெ‌ஷல் உள்ளிட்ட பல படங்கள் கமல், ஸ்ரீபிரியா இருவரும் ஜோடியாக நடித்தனர். இப்படி திரைப்படங்களில் கமலோடு இணைந்து பயணித்த ஸ்ரீபிரியா, அரசியல் பயணத்தையும் கமலுடனேயே
இணைந்து பயணத்தைத் துவங்கினார். ஆனால் இடையிலேயே தனது அரசியல் பயணத்தை முடித்துக்கொண்டார்.

அதே நேரம் இது குறித்து ஸ்ரீப்ரியா தரப்பில் விசாரித்தபோது, முடிவாக எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.