நடிகர் ஆர்யாவுக்கு மனைவியாக ஆசையா? டயல் 73301 73301

சென்னை,

ளம் நடிகர்களில் தனக்கென தனி பானி அமைத்து நடித்து வருபவர் ஆர்யா. நண்பேன்டா என்ற எழுத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் படங்களை தேர்வு செய்தும், இளம் நடிகர்களோடு நட்புணர்வோடும் பழகி வருபவர் நடிகர் ஆர்யா.

தற்போதுள்ள இளம் நடிகர்களில் இவருக்கும், நடிகர் விஷாலுக்கும் மட்டுமே இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிகர் விஷாலோ நடிகர் சங்கம் கட்டப்பட்ட பிறகுதான் தனது திருமணம் நடைபெறும் என்று அறிவித்து விட்டார். இந்நிலையில், நடிகர் ஆர்யாவுக்கு அவரது குடும்பத்தினர் வரன் தேடி வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், தனக்கு பெண் தேடுவதாக ஆர்யா வீடியோ பதிவு ஒன்றை தனது டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில்,  “போன வாரம் ஜிம்முல நான் கல்யாணம் பண்றதா பேசிட்டிருந்த ஒரு விஷயம் வீடியோவா லீக் ஆச்சு. அதுல எனக்குத் தெரியாம என் பிரண்ட்ஸ் விளையாட்டுத்தனமா பண்ண விஷயம். ஆனா, அதுல பேசின எல்லா விஷயமும் உண்மை தான்.

நான் கல்யாணத்துக்காக பொண்ணு தேடிட்டிருக்கேன். பொதுவா எல்லாருமே அவங்களோட லைப் பார்ட்னரை வந்து அவங்களோட வொர்க் பிளேஸ், பிரன்ட்ஸ், பேமிலி, ரிலேட்டிவ்ஸ் மூலமா தேடிப்பாங்க. இல்லனா, மேட்ரிமோனியல் சைட்ஸ்.

ஆனா, நான் அப்படியில்லங்க. எனக்குப் பெரிய டிமான்ட்ஸோ, கன்டிஷன்ஸோ கிடையாது. உங்களுக்கு என்னை பிடிச்சிருந்தா, நான் உங்களுக்கு ஒரு நல்ல லைப் பார்ட்னரா இருப்பன்னு நீங்க நினைச்சிங்கன்னா, 73301 73301 நம்பருக்கு கால் பண்ணுங்க.

இது வந்து பிரான்க் இல்ல ஜோக், இல்லை விளையாட்டுத்தனமா பண்றன்னு நினைச்சிக்காதீங்க, இது என்னோட லைப் மேட்டர், இந்த நம்பருக்கு தயவு செஞ்சி கால் பண்ணுங்க, உங்களுக்காகக் காத்திருக்கிறேன்,” என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

ஆர்யாவின் இந்த வெளிப்படையான  பெண் தேடும் படலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://youtu.be/pUvZmNExXO0