Random image

ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டாரா?:  தமிழிசை பதில்

ன்னிடம் பெட்ரோல் விலை உயர்வு பற்றி கேள்வி எழுப்பிய ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாக தகவல் தவறு என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவருக்கு பின்னால் இருந்த காக்கிச் சட்டை அணிந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் “அக்கா, பெட்ரோல் விலை ஏன் உயர்கிறது”  என்று ஆட்டோ டிரைவர் கேட்டார். இதைக் கவனிக்காதது போல் சிரித்துவிட்டு தமிழிசை பேட்டியை தொடர்ந்தார்.

தமிழிசைக்குப் பின்னால் இருந்த பாஜகவினர் அந்த ஓட்டுநரை டிரைவரை பிடித்து வெளியே தள்ளினர். அவர்கள் அந்த ஓட்டுநரை தாக்கியதாகவும் வீடியோ வெளியானது.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது. அந்த வீடியோவை பார்த்தால், முதலில் ஆட்டோ ஓட்டுநரின் தலைமுடியை தமிழிசைக்கு பின்னால் இருந்த நபர் இழுக்கிறார். பின்னர், அவரை வெளியே இழுத்து தள்ளுகிறார். தமிழிசைக்கு அருகில் இருக்கும் நபரும் ஆட்டோ ஓட்டுநரை பிடித்து தள்ளுகிறார். பின்னர் ஆட்டோர் ஓட்டுநர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த ஆட்டோ ஓட்டுநர், டைம்ஸ் நவ் தொலைக்காட்சியிடம் தெரிவிக்கையில், “பெட்ரோல் விலை உயர்வால் ஆட்டோ டிரைவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பற்றிய எனது வேதனையைதான் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் தவறாக எடுத்துக் கொண்டார்கள். இதுதான் நடந்தது. ஒரு நாளைக்கு 300 ரூபாய்க்கு பெட்ரோல் போடுகிறோம். ஆட்டோ வாடகைக்கு ரூ150 கொடுக்கிறோம். பெட்ரோல் விலை உயர்வால் வாடகை போக ஒரு நாளைக்கு 350 ரூபாய் தான் கிடைக்கிறது. சாப்பாடு உள்ளிட்ட செலவுக்கு 500 ரூபாய்க்கு மேல் செலவாகும். எங்களால் சமாளிக்க இயலவில்லை” என்றார்.

இந்த நிலையில் தமிழிசை, “ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்படவில்லை. அப்படி யாராவது அவரை தாக்கி இருந்தால் அது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்திருக்கிறார்.