தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசன்’.

இந்தப் படத்தின் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ரீமேக்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தி ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கியது.இந்தி ரீமேக் உரிமையை பட வெளியீட்டுக்கு முன்பே விஷ்ணு விஷால் கைப்பற்றிவிட்டார்.

தற்போது அதில் ஆயுஷ்மான் குரானா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது இந்தி ரீமேக் உரிமையை வேறொருவருக்கு விற்றுவிட்டார் விஷ்ணு விஷால் எனவும் தகவல் கசிந்துள்ளது .