உ.பி.: வாக்கு எந்திரத்தில் கோல்மால் செய்து பாஜக வென்றதா?

--

பா.ஏகலைவன் அவர்களது முகநூல் பதிவு:

.

“இயந்திர வாக்குப்பதிவில் திட்டமிட்ட கோளாறே தோல்விக்கு காரணம். இந்த விவகாரத்தில் எல்லா அரசியல் கட்சிகளும், களமிறங்கி போராடவில்லை எனில் எதிர்காலத்தில் அது ஜனநாயகத்திற்கு மிகபெரிய அச்சுறுத்தலாக அமையும் ” என்ற மாயாவதியின் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது.

இதே குற்றச்சாட்டை முன்பு சுப்ரமணியசாமியும் எழுப்பியிருக்கிறார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோல்மால் திருட்டுத்தனம் செய்ய முடியும் என்று டெல்லி நீதிமன்றத்தில் தாக்கீதும் செய்திருந்தார். அதற்கான ஸ்பெஷலிஸ்ட்டுகள் மூலம் நிருபீக்க முடியும் என்றார்.

தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ராமதாஸும் இயந்திர வாக்குப்பெட்டியில் மோசடி செய்ய முடியும் என்று பத்திரியாளர்கள் சந்திப்பில் வெளிப்படுத்தினார்.

உறுப்படியா ஒன்றம் செய்யாத பாஜ.க.விற்கு 290 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற வைக்கும் அளவிற்கு வாக்களித்திருப்பார்கள் என்பது சந்தேகமே. என்னமோ செய்திருக்கிறார்கள்.

தமிழகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் ஆணையத்திடம் முறையிட வேண்டும். நீதிமன்றத்தை நாடவேண்டும். இல்லை என்றால் தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளில் 200 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி என்ற செய்தி வெளியாகும்..