“சின்ன வீடு” திருட்டுக்கதையா?: ஏற்கெனவே விளக்கம் அளித்த பாக்யராஜ்

“பாக்யராஜின் சின்ன வீடு திரைப்டம் காப்பி இல்லையா” என்று இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கேட்டிருக்கும் நிலையில் “இது குறித்து பாக்யராஜ் ஏற்கெனவே விளக்கம் அளித்திருக்கிறார்” என்பதைக் குறிப்பட்டிருக்கிறார் எழுத்தாளர் சத்யப்ரியன்.

விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் “சர்கார்” படத்தின் கதை, தன்னுடைய செங்கோல் கதைதான் என்று அருண் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கும் தொடுத்திருக்கறார்.

இது குறித்து விசாரித்த கே.பாக்யராஜ் தலைமையிலான எழுத்தாளர் சங்கம், “சர்கார் படத்தின் கதையும் செங்கோல் கதையும் ஒன்றுதான்” என்று அறிவித்தது.

முருகதாஸ் – விஜய் – பாக்யராஜ்

இதற்கு பதில் அளித்த ஏ.ஆர்.முருகதாஸ், “கே.பாக்யராஜின் சின்னவீடு படமும் அதற்கு ஒரு வருடம் முன் வெளியான கோபுரங்கள் சாய்வதில்லை திரைப்படமும்   ஒரே மாதிரியான கதைதான். அப்படியானால பாக்யராஜ் காப்பி அடித்தாரா” என்று கேட்டிருந்தார்.

இது குறித்து எழுத்தாளர்  சத்யப்ரியன் ஒரு சம்பவத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அது..

“பத்திரிகையாசிரியர் ரவி பிரகாஷின் நூல் வெளியீட்டு விழாவில் பாக்கியராஜ் சின்ன வீடு குறித்துக் கூறிய முக்கிய விஷயம் ஒன்று. முந்தானை முடிச்சு படத்திற்கு முன்பாகவே பாக்கியராஜ் சின்ன வீடு படத்தின் கதையைத்தான் ஏ.வி.எம் நிறுவனத்திடம் கூறினார். அவர்களும் அதை படமாக்க தீர்மானித்தனர். ஆனால் திடீரென ஒருநாள் மீடியேட்டர் ஒருவரை அனுப்பிப் படத்தின் டைட்டிலை மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். ஏன் என்றால் அந்த நிறுவனத்திலிருந்து வெளிவரும் படங்கள் எல்லாமுமே ஏ.வி.எம்மின் என்றே வரும் என்பதால் ஏ.வி.எம்மின் சின்ன வீடு என்று பெயர் இருந்தால் நன்றாக இருக்காது என்று பெயர் மாற்ற கூறினர்.

இதற்கு நடுவில் கலைமணி தனது கதை ஒன்றை சொந்தப் படமாக எடுக்கிறார் என்றும் அதுவும் சின்ன வீடு கதையும் ஒரே மாதிரி இருப்பதால் ஏ.வி.எம் கலைமணியின் என்ட்ரியில் குறிக்கிட விரும்பவில்லை என்று வேறு கதை சொல்லச் சொல்லி அதன் பிறகு எடுத்த படம்தான் முந்தானை முடிச்சு.

எனவே முருகதாஸ் கூறியது போல பாக்கியராஜ் கதையைத் திருடியிருக்க வாய்ப்பில்லை” என்று சத்யப்ரியன் தெரிவித்திருக்கிறார்.

கார்ட்டூன் கேலரி