ராஜமவுலியின் பாகுபலி படத்துக்கு வசனம் எழுதினார் மதன்கார்க்கி. அடுத்து ராஜமவுலி மீண்டும் இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்துக்கும் மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.
அவர் கூறும்போது.’ஆர் ஆர் ஆர் அதாவது ரதம் ரணம் ரவுத்திரம் படம் மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகிறது. தேச பக்தியை வலுவாக சொல்லும் படம். பாகுபலி படத்தில் வசனம் எழுதியதற்கும் இப்படத்தில் வசனம் எழுதுவதற்கும் என்ன வித்தியாசம் என்கிறார்கள்.

பாகுபலி பட வசனம் சவாலானது. அக்கதைக்காக கிலிக்கி என்ற புதிய மொழியையே உருவாக்க வேண்டி இருந்தது. இப்படத்துக்கு புதிய மொழி எதுவும் உருவாக வேண்டியதாக இல்லை. ஆனால் சக்தி வாய்ந்த தேச பக்தி வசனம் எழுதப்பட்டிருக்கிறது. ராஜமவுலியை பொருத்தவரை வசனங்கள் பெரியதாக இல்லாமல் சிறியதாக இருக்க வேண்டும் என்பார். அப்படியே வசனங்கள் அமைக்கப்பட்டிருகின்றன’ என்றார் மதன் கார்க்கி.
ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இணைந்து நடிக்கின்றனர்.