டில்லி குடும்பத்தினர் ஆன்மிகத்தால்  தற்கொலையா?  : அதிர்ச்சித் தகவல்கள்

டில்லி

டில்லியில் புராரி பகுதியில் நேற்று 11 பேர் தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

A palm

நேற்று டில்லி நகரின் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.   அவர்கள் அனைவரும் தூக்கில் தொங்கிய படி கண்டெடுக்கப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின.  அனைவரும் கைகளும் கண்களும் கட்டப்பட்டு தூக்கில் பிணமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகின.

தற்போது வந்துள்ள தகவலின் படி அவர்களில் 10 பேர் கைகளும் கண்களும் கட்டியபடி தூக்கில் பிணமாக இருந்துள்ளனர்.  ஒரு வயதான பெண்மணி கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கீழே கிடந்துள்ளார்.   அவருக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பூஜை அலமாரியில் ஒரு சில கட்டளைகள் அடங்கிய கையால் எழுதப்பட்ட நோட்டுப் புத்தகம் ஒன்று கிடைத்துள்ளது.

அந்த நோட்டுப் புக்கத்தகத்தில் குடும்பத்தில் உள்ள 11 பேர் கொலை செய்ததைப் போல் காட்டப்பட்டு தற்கொலை செய்துக் கொண்டால் மீதமுள்ள குடும்பத்தினருக்கு வளமான எதிர்காலம் உண்டு என எழுதப்பட்டிருந்தது.   அது தவிர இது போல பல பயங்கர அறிவுரைகள் 2017 ஆம் வருடத்தில் இருந்து எழுதப்பட்டிருந்தன.    அதற்கேற்றாற்போல் 10 பேரும் கைகளும் கண்களும் கட்டப்பட்டு  தூக்கில் மரணம் அடைந்திருந்தனர்.

அந்த வீட்டில் இறந்துள்ளவர்கள் நாராயண் பாட்டியா (75), அவர் மகள் பிரதிபா(60) பிரதிபாவின் மகள் பிரியங்கா(30),  நாரயணின் மூத்த மகன் புபி பாடியா(46), அவர் மனைவி சவிதா (42),  அவர்களின் குழந்தைகள் நீத்து(24),  மீனு(22) தீரு(12),  நாரயணின் இளைய மகன் லலித் பாட்டியா(42) மற்றும் அவர் மனைவி டினா(38) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது குறித்து அவர்களிடம் பணிபுரிந்த ஒரு பெண்மணி, “நான் ஆறு வருடங்களுக்கு முன்பு வீட்டுப் பணி செய்து வந்தேன்.   அவர்கள் கண்மூடித்தனமான பக்தியைக் கொண்டவர்களாக விளங்கினர்.  அவர்களை சிறு தவறுகள் செய்தாலும் புபி பாடியா மிகவும் சத்தம் போட்டுக் கண்டிப்பார்” என கூறி உள்ளார்.

இந்த மர்ம மரணங்களுக்கான காரணம் அளவுக்கு மீறிய ஆன்மீகம் என அந்தப் பகுதி மக்களும் தெரிவித்துள்ளனர்.    அந்த நோட்டுப் புத்தகத்தில் அவர்கள் எவ்வாறு தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அறிவுரைகள் காணபட்டதாக சொல்லப்படுகிறது.