தாதா – 87” படப்பாடல்: ரஜினி அரசியலை கிண்டல் செய்யும் கமல் & சாருஹாசன்? : வீடியோ

விஜய்ஸ்ரீ இயக்கிவரும் தாதா  87 படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம்.. படத்தின் ஹீரோ, சாருஹாசன்!  இவருக்கு தற்போது 87 வயது ஆகிறது.. இந்த நிலையில் இவரை நாயகனாக்கி.. அவரது வயதைக் குறிக்கும் வகையில் “தாதா 87” என்றே பெயரும் வைத்திருக்கிறார்கள்.

சில வருடங்களாக உடல்நிலை ஒத்துழைக்காகதால் நடிப்பில் இருந்து விலகியிருந்தார் சாருஹாசன். இந்த நிலையில் இயக்குநர் விஜய்ஸ்ரீ கூறிய கதை பிடித்துவிடவே, நடிக்க ஒப்புக்கொண்டார் சாருஹாசன். இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடிக்கிறார்.

மேலும், நீண்ட காலத்துக்குப் பிறகு ஜனகராஜூம் நடிக்கிறார்.

ரஜினி – சாரு – கமல்

இந்த நிலையில் அதிரடியாக இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அந்தப் பாடல்தான் ரஜினி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

“அரசியலுக்கு வருவேனா இல்லையா என்பதையே சொல்லாமல் இருபது வருடங்களுக்கு மேல் இருந்தார் ரஜினி. கடந்த வருடம் டிசம்பர் மாதம், அரசியலுக்கு வருவதாகச் சொன்னார். ஆனால் அதன் பிறகும் முக்கிய நிகழ்வுகள் பற்றி கருத்து தெரிவிப்பதில்லை” என்று ரஜினி மீது ஒரு விமர்சனம் உண்டு.

படத்தில்.. சாருஹாசன்

குறிப்பாக, “உங்கள் கட்சிக் கொள்கை என்ன” என்று செய்தியாளர் ஒருவர் ரஜினியை கேட்க.. இது குறித்து பின்னர் தெரிவித்த ரஜினி.. “கொள்கை என்னன்னு கேட்டவுடனே ஒருநிமிசம் எனக்கு தலை சுத்திருச்சு” என்று பேட்டி அளித்தார்.

இதையடுத்து அவரை சமூகவலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்தார்கள்.

“கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்பவர் கொள்கை குறித்து கேட்டால் தலை சுத்துது  என்று பதில் சொல்வதா” என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர். கிண்டல் செய்தனர்.

சரோஜா – சாருஹாசன்

“ஒரு நிமிசம் தலை சுத்திருச்சு..” என்பது சமூகவலைதளங்களில் ட்ரண்ட் ஆனது.

இந்த நிலையில், “தாதா 87” படத்தில் “ஒரு நிமிசம் தலை சுத்திருச்சு” என்று ஒரு பாடல் இடம் பெறுகிறது.

“இது ரஜினியை கிண்டல் செய்வதற்காகவே வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் கமலின் அண்ணன் சாருஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். ஆக வேண்டுமென்றே ரஜினியை கிண்டல் செய்ய இந்தப்பாடலை வைத்திருக்கிறார்கள். இதன் பின்னணியில் சாருஹாசனும் கமலும் இருப்பார்களோ என்று தோன்றுகிறது” என்று ரஜினி ரசிகர்களிடமிருந்து முணுமுணுப்பு எழுந்துள்ளது.

“ஒரு நிமிசம் தலை சுத்திருச்சு..” பாடல் வீடியோ:

 

You may have missed