அமலாபால் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமா…?

இயக்குநர் விஜய்-க்கும் நடிகை அமலா பாலுக்கும் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு 2017 பிப்ரவரி மாதம் இருவரும் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து ஐஸ்வர்யா என்ற பெண்ணை ஜூலை 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டார் இயக்குநர் விஜய்.

இதற்கு தனுஷ் தான் காரணம் என ஏ.எல்.விஜய்யின் அப்பா சில வாரங்கள் முன்பு குற்றம்சாட்டியிருந்தார்.

திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்காமல் இருந்த அமலா பாலை அம்மா கணக்கு படத்தில் நடிக்க வைத்தது தனுஷ் தான். அதன் பிறகு தான் பிரச்சனை வந்தது என அவர் கூறினார்.

இந்நிலையில் இதுகுறித்து ஆந்திர பிரபா என்ற இணைய ஊடகத்துக்கு அமலாபால் பேட்டியளித்துள்ளார் “விவாகரத்து என்னுடைய சொந்த முடிவு. அதற்கு வேறு யாரும் பொறுப்பு இல்லை, காரணமும் இல்லை” என பதில் கூறியுள்ளார். தனுஷ் என்னுடைய நலம் விரும்பி. இது குறித்து என்னிடம் வேறு எதையும் கேட்க வேண்டாம். நானும் அதைப்பற்றி பேச விரும்பவில்லை” என்றார்.

அதுமட்டுமின்றி தற்போது காதலித்து வருபவருடன் இரண்டாம் திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார் அவர்.