தோனி கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுகிறாரா ? – ரவி சாஸ்திரி விளக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டிக்கு பிறகு அம்பயரிடம் இருந்து தோனி பந்தை வாங்கியதால் அவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தோனி அம்பயரிடம் இருந்து ஏன் பந்தை வாங்கினார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளர்.

dhoni

இங்கிலாந்து சென்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இதில் 2-1 என்ற புள்ளிகளில் இந்திய அணியை இங்கிலாந்து வென்றது. இந்த போட்டிகளில் தோனி சிறப்பாக செயல்படவில்லை என சமூக வளைதளங்களில் பலர் விமர்சித்து கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் கடைசி ஒரு நாள் போட்டி முடிந்த உடன் மைதானத்தில் அம்பயரிடம் இருந்து பந்தை தோனி பெற்றார். இதை பார்த்த பலர் அவர் ஓய்வு பெற உள்ளதாக யூகித்து கொண்டு பலவிதமான கருத்துக்களை பரப்பி வந்தனர். ஏனெனில் ஒவ்வொரு போட்டிகளில் வெற்றிப்பெற்ற பின்பு ஸ்டம்பை எடுத்து கொள்வதை வழக்கமாக தோனி வைத்திருந்தார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, முக்கிய போட்டிகளை நினைவு படுத்தும் விதமாக ஸ்டம்புகளை எடுத்து கொள்வதாகவும், ஸ்டம்புகளில் உள்ள ஸ்பான்சரின் பெயரை வைத்து அந்த போட்டியின் நினைவுகள் தன் மனதில் இருக்கும் என்றும் கூறியுள்ளார். தற்போது யாரும் எதிர்பாராத விதமக தோனி பந்தை அம்பயரிடம் இருந்து வாங்கியதால் இது தான் அவருக்கு கடைசி போட்டியாக இருக்குமோ என்று பலர் எண்ணினர்.

இந்நிலையில் போட்டிக்கு பின் தோனி ஏன் பந்தை அம்பயரிடம் இருந்து பெற்றார் என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். ரவி சாஸ்திரி கூறுகையில், ‘இந்திய பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் இடம் பந்தை காண்பிக்க தான் அம்பயரிடம் இருந்து அதனை தோனி வாங்கினார். பந்து எப்படி உள்ளது என்பதை வைத்து ஆடுகளத்தின் தன்மையை அறிந்து கொள்ளவே அவர் பந்தை வாங்கினார். இதைப்போய் ஓய்வு என வேலையில்லாதவர்கள் கிளப்பிவிட்டு விட்டார்கள். தோனி எங்கும் போகப்போவது இல்லை’ என்று கூறினார்.

எம்.எஸ். தோனி இதுவரை பங்கேற்ற 321 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 10,046 ரன்களையும், 10 சதங்களையும், 67 அரை சதங்களையும் எடுத்துள்ளார். சர்வதேச அளவிலான 93 டி20 போட்டிகளில் 1487 ரன்களை எடுத்துள்ளார்.

மேலும் இவர் இந்திய அணியின் கேப்டனாக தலைமை ஏற்ற பின்பு 2011ம் ஆண்டு உலக கோப்பையையும், 2007ம் ஆண்டு உலக டி20 டைட்டிலையும் பெற்று தந்தார். மேலும், 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டிராபி கோப்பையையும் வென்றுள்ளார்.

உலக அளவில் இரண்டாவது ஆளாக 10,000 ரன்களை கடந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றவர் தோனி.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-