விலங்குடன் உடலுறவு கொள்வது தவறில்லை என்று சொன்னாரா அமீர்?

திரைப்பட இயக்குநர் அமீர், “ஒரு ஆணுக்கு விலங்குடன் உறவுகொள்ள வேண்டும் என்று உணர்வு ஏற்பட்டால் அதுவும் ஒரு உணர்வுதானே.. அதை ஏன் தடுக்க வேண்டும்? விலங்கு சம்மதித்தால் அவனும் சம்பதித்தால் உறவு கொள்ள வேண்டியதுதானே” என்று  பேசிய வீடியோ காட்சி ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்து, விலங்குகளுடன் மனிதர்கள் உறவு கொள்வதை ஆதரிக்கிறாரா அமீர் என்று பலர் அமீருக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து அமீரிடம் கேட்டபோது, “நியூஸ் கிளிட்ஸ் இணையத்துக்கு நான் அளித்த பேட்டியில் இருந்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி பரப்பி வருகிறார்கள்.

ஓரினச்சேர்க்கை குறித்து  எனது கருத்தை வெளிப்படுத்திய பேட்டி அது. அதில், ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு முரணானது, மனித கலாச்சாரத்தின் வேரை அழிப்பது, அதை அனுமதிக்கக் கூடாது என்று பேசினேன்.

மேலும், ஆணுடன் ஆண் விருப்பம்.. என்பது ஒரு உணர்வு. அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அப்படியானால் விலங்குகளுடன் ஆண் உறவு கொள்ள விரும்பினால் அந்த உணர்வை ஏன் தடுக்க வேண்டும் என்று பேசினேன்.

அதாவது ஓரினச்சேர்க்கை மற்றும் விலங்குடன் உறவு ஆகியவற்றை எதிர்த்து நான் பேசிய வீடியோவை குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி  என் கருத்துக்கு முரணான அர்த்தம் தொணிக்கும் வகையில் பரப்பி வருகிறார்கள்” என்றார்.

அமீர் பேசிய முழு வீடியோ:

 

 

video courtesy: newsglitz

 

 

You may have missed