அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ள கருணாஸ், 84 தொகுதிகள் வரை தனித்துப் போட்டியிடப் போவதாகவும், அதிமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார.

சிறையிலிருந்து வெளிவந்த சசிகலாவை அவர் நேரில் சென்று சந்திப்பதை தவிர்த்தாலும், அவருக்கு சீட் கிடைப்பது கடினம் என்றுதான் கருதப்பட்டது. அதேபோல் எடப்பாடியின் அதிமுக அவரைப் புறக்கணித்துள்ளது.

ஆனாலும், ஒரு சிறிய அமைப்பைச் சேர்ந்த கருணாஸ், 84 தொகுதிகளில் தனித்துப்போட்டி என்றும், அதிமுவை எதிர்த்து, இளைஞர்களை திரட்டி பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அதிமுகவை இரண்டு சமூகங்களுக்கான கட்சியாக தலைமை மாற்றிவிட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த 2 சமூகங்கள், கொங்கு வேளாள கவுண்டர்கள் & வன்னியர்களாக இருக்கலாம்.

கருணாஸ் இந்தளவிற்கு பெரிய முடிவு எடுப்பதற்கு பின்னணியில் திமுக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. முக்குலத்தோர் வாக்கு வங்கி, இத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எதிராக இருக்கும் என்று கணிக்கப்படும் நிலையில், கிடைத்த சிறிய வாய்ப்பையும்கூட திமுக பயன்படுத்திக்கொள்ள நினைத்திருக்கலாம்.

எனவே, அச்சமூகத்தைச் சேர்ந்த கருணாஸை, அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வைத்தாலும், இத்தேர்தலில் அது சற்று பெரிய விளைவையே ஏற்படுத்தக்கூடும் என்று திமுக கருதலாம்!

கருணாஸ் நினைத்திருந்தால் ‘மய்ய’ கூட்டணியில்கூட சேர்ந்திருக்கலாம். ஆனால், அவரின் தனித்துப்போட்டி என்ற சக்திக்கு மீறிய முடிவுதான், நம்மை இப்படி யோசிக்க வ‍ைக்கிறது.