எடப்பாடி யாருக்கு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்கிறார்? ஸ்டாலின்

சென்னை:

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்ல உள்ளார். இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதல்வர் யாருக்கு முதலீடுகளை ஈர்க்க செல்கிறார் என்று விமர்சித்து உள்ளார்.

கட்சி உறுப்பினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

தமிழக முதல்வர் வரும் 28ந்தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை கவரவும்,  அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழக தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய நிறுவனங் களின் அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு கோரிக்கை வைப்பதற்காக ரும் 28ம் தேதி புறப்படும் முதல்வர் செப்டம்பர் 7-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

இதுகுறித்து சென்னை அண்ணா நகரில் கட்சி உறுப்பினர் திருமண நிகழ்ச்சியில்  பேசிய ஸ்டாலின், “தமிழகத்தில் 8 வருடங்களாக அதிமுகதான் ஆட்சியில் இருந்துவருகிறது. அதிமுக ஆட்சி நடக்கிறதா அல்லது இல்லையா என்பது வேறு விஷயம். அதிமுக ஆட்சி நடப்பதற்கு காரணமே திமுகதான் என்று கூறியவர்,   ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றக் கூடிய கட்சி திமுகதான் என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  பிரதமர் மோடி ஒவ்வொரு நாடாக போய் வந்தார். இந்த லட்சணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளிநாடு செல்கிறாராம்.  எடப்பாடி வெளிநாடு போகட்டும்.. நான் வேணாம்னு சொல்லல.. குறையும் சொல்லல.. முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு போறதா சொல்றாங்களாம்.. ஆனா அது யார் முதலீடு? முதலீடுகள் நாட்டுக்கா இல்லை, எடப்பாடி பழனிசாமிக்கான்னுதான் தெரியல” என்று கூறினார்.