டில்லி: கிறிஸ்தவர்களுக்கு ஆதார் அட்டையில் இருந்து விதிவிலக்கா என்பது குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஐசக் ஜான் என்ற மாணவர் மேல்நிலைப் பள்ளியில் சேர விண்ணப்பித்தார். பள்ளி நிர்வாகம் அவருடைய ஆதார் எண்ணை கேட்டது.  மாணவரிடம் ஆதார் எண் இல்லாததால் அவருக்கு  சேர்க்கை மறுக்கப்பட்டது.

இதையடுத்து மாணவர் ஐசக் ஜானின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “ஒரு எண்ணை அடையாளமாகப் பெறுவது நாங்கள் பின்பற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானது. ஆகவே கிறிஸ்தவர்களான எங்களுக்கு  ஆதார் அட்டை பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சிக்ரி, கன்வில்கார், சந்திரசத், அசோக் பூஷன் உள்ளிட்ட 5 நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவிடம் “இது முழுக்க முழுக்க சட்டப்பூர்வமான விஷயம், ஆனால் ஆதார் விவகாரத்தில் மத ரீதியாக நீதிமன்றம் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை” என்று தெரிவித்துவிட்டனர்.