’தீபிகா உள்ளிட்ட நான்கு நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு நற்சான்றிதழ் வழங்கியதா?’’

’தீபிகா உள்ளிட்ட நான்கு நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு நற்சான்றிதழ் வழங்கியதா?’’
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை  சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையில், இந்தி சினிமா நட்சத்திரங்களின் போதைப் பொருள் பயன்பாடு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வழக்கில் சுஷாந்தின் காதலியான நடிகை ரியா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்..
இந்த நிலையில் மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், இந்தி நடிகை ராகுல் ப்ரித் சிங், கடந்த வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
மறுநாள் ( சனிக்கிழமை) தீபிகா படுகோனே,சாரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோர் தனித்தனியாக  ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
’இந்த நான்கு நடிகைகளும் தவறு செய்ய வில்லை என்று அவர்களுக்குப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு நற்சான்றிதழ் வழங்கி விட்டது’’ என மும்பையில் உள்ள சில ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஆனால், இதனைப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
‘’இந்த வழக்கில் நாங்கள் யாருக்கும்  நற்சான்றிதழ் அளிக்கவில்லை. அவர்கள் தனித்தனியாகக் கொடுத்த  வாக்குமூலங்கள் ஒத்துப்போகிறதா?’’ என விசாரித்து வருகிறோம்’’ எனப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
-பா.பாரதி.