நெட்டிசன்:

ரசு பணத்தை மோசடி செய்த தனது அண்ணனை தேசத்துரோகி என ஹெச்.ராஜா சொல்வாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

கும்பகோணம் அரசு தலைமை போக்குவரத்து கழக அலுவலகத்தில்  2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை கணக்காளராகப் பணிபுரிந்தவர் ஹெச். ராஜாவின் அண்ணன் சுந்தர்.

சுந்தர் தமது, பணிகாலத்தின் போது போலியான கணக்கு காட்டி,  அரசு பணத்தை  மோசடி செய்த தாக புகார் எழுந்தது.   இதையடுத்து அதிமுக ஆட்சிக் காலத்தில் சுந்தர் மீது வழக்கு தொடரப்பட்டது. 2011-ம் ஆண்டுக்குப் பிறகு  சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் சுந்தர் பணிபுரிந்தார். கடைசியாக போக்குவரத்து வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் ஜூனியர் மேலாண்மை இயக்குநராக  பணியாற்றினார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 31-ந் தேதி சுந்தர் பணி ஓய்வு பெற இருந்த நிலையில், அதற்கு முதல் நாள் சுந்தர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சமூகவலைதளங்களில் பலரும் இது குறித்து எழுதி வருகிறார்கள்.

அவர்கள் கருத்து இதுதான்:

மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் ஊழல் என்பதே மிகப்பெரிய தேசத்துரோகம். இதை ஒரு முறை நீதிமன்ற நீதிபதிகளே தெரிவித்துள்ளனர்.

தன்னை  கேள்வி கேட்கும் செய்தியாளர்கள் உட்பட அனைவரையுமே தேசதுரோகி என ஏக வசனத்தில் விமர்சித்துவரும்  ஹெச்.ராஜா.,  மக்கள் பணத்தை கையாடல் செய்த தனது அண்ணன் சுந்தரை தேசத்துரோகி என்பாரா?