கமலஹாசன் ராசிப்படி அரசியல் சரிவருமா?

டிகர் ரஜினி, அரசியலுக்கு வருவது போல ஒரு தோற்றம் இருந்தபோது அவரது அரசியல் எதிர்காலம் குறித்து ஜோதிடர்கள் பலர் ஆரூடம் சொன்னார்கள்.

ரஜினியோ மவுனச்சாமியாகிவிட்டார். இந்த நிலையில், தமிழக அரசியலை நடிகர் கமலஹாசன் விமர்சித்து வந்ததோடு, ஊழல் குறித்து அமைச்சர்களின் இணைய முகவரிக்கு தகவல் அனுப்புங்கள் என்றும் நேற்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

உடனே ஜோதிடர்கள் சிலர், கமலின் அரசியல் எதிர்காலம் (!) குறித்து கணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அப்படி ஒரு வாட்ஸ் அப் பதிவு இது:

“கமலஹாசன் அவர்களுக்கு, ஜாதகத்தில் செவ்வாய் உச்சம், சனி உச்சம், குரு உச்சம், சூரியன் உச்சம், செவ்வாய் உச்சமெனில் ஈடுபடும் துறையில் No.1 . புவியாலும் யோகம்,

குரு உச்சமெனில் அறிவில் தெளிவு, சனி உச்சமெனில் நீண்ட ஆயுள், பொய்க்கு, புரட்டுக்கு அடிபணியாமை.

கமலுக்கு ராசியாக மீனம் இருப்பதால், தற்சமயம் குரு 7 லில் இருப்பதால் மிகப் பெரிய அளவில் தமிழகம் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் அரசியலில் புகழ் பெறுவதற்கான வாய்ப்புகள் ஆரம்பமாகியுள்ளது,

உலகிற்கு வழிகாட்டும் ஒப்பற்ற தலைவராக விளங்குவார் என்றால் மிகையாகாது. …..”

என்னமோ போங்கப்பா