நான் போலி பகுத்தறிவாதியா?….கமல் ஆவேசம்

சென்னை:

நடிகர் கமல் அமாவாசை அன்று கட்சியை தொடங்குகிறார். கொடியேற்றுகிறார். ஆனால் ‘‘மய்யம்’’என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து பகுத்தறிவு பேசுகிறார். இவ்வாறு பேசி போலி வே‌ஷம் போடுவதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறியிருந்தார்.

 

 

 

இந்நிலையில் கமல் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ஒரே நேரத்தில் சட்ட மன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தக் கூடாது. லோக் ஆயுக்தா சட்டம் நீர்த்து போன நிலையில் உள்ளது.

என்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது. நான் பகுத்தறிவாளன். ஏழ்மையையும், ஊழலையும் ஒழிக்கவே அரசியலுக்கு வந்தேன். மூட நம்பிக்கைகளை ஒழிக்க அல்ல. ஆழ்வார் பேட்டை ஆண்டவா என தொண்டர்கள் அழைப்பதை நிறுத்த அறிவுறுத்துவேன்’’ என்றார்.