டில்லி

சீன பிரதமர் ஜி ஜின்பிங் 2014 ஆம் வருட இந்திய பயணத்தின் போது தம்மை சந்திக்க ஒப்புக் கொண்ட போதும் மத்திய அரசு அதை தடுத்துள்ளதாக தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

கடந்த 1959 ஆம் வருடம் சீனாவை விட்டு வெளியேறிய புத்த மத தலைவர் தலாய் லாமா தற்போது திபேத் பகுதியில் வசித்து வருகிறார்.   தாம் பிறந்த நாடான சீனாவுக்கு அவர் திரும்ப விரும்பினார்.  அதை ஒட்டி தலாய் லாமா தரப்பில் இருந்து சீன அரசுடன் கடந்த 2010 ஆம் வருடம் ஜனவரி மாதம் வரை ஒன்பது கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன.

இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் தலாய் லாமாவால் சீன நாட்டுக்கு திரும்ப முடியவில்லை.   இந்நிலையில் சீன பிரதமர் ஜி ஜின்பிங் கடந்த 2014 ஆம் அண்டு இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியை சந்தித்தார்.    அப்போது சீன பிரதமர் தலாய் லாமாவை சந்திக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அதை மத்திய அரசு தடுத்துள்ளதாகவும் தலாய் லாமா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கருத்து தெரிவிக்கவில்லை.   இருப்பினும் சீன பிரதமர் பயணத்தை திட்டமிட்ட இரு மூத்த அதிகாரிகள் அப்படி ஒரு திட்டம் இல்லை என மறுத்துள்ளனர்.  மேலும்  தலாய் லாமா தெரிவித்தது தவறான செய்தி எனவும் சீன பிரதமர் சந்திக்க விரும்பி இருந்தால் அரசு அதை தடுத்து இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தலாய் லாமாவின் ஆதரவாளர்கள் இந்த சந்திப்புக்கு சீன அரசுக்கு நெருக்கமான ஹாங்காங் தொழிலதிபர் மூலம் முயற்சி செய்ததாகவும் அதை சீன அரசு மறுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.     ஆனால் தலாய் லாமாவை சேர்ந்தவர்கள் இது தவறான தகவல் என அறிவித்ததுடன்  அடுத்த வருடம் அனேகமாக சீன பிரதமர் இந்தியா வரும் போது அவர் தலாய் லாமாவை சந்திப்பார் என தெரிவித்துள்ளனர்.