இந்திய ஏவுகணையால் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தாக்கப்பட்ட்டதா? விசாரணை தகவல்

புத்காம், காஷ்மீர்

டந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இந்திய விமானப்படை விமானம் இந்திய ஏவுகணையால் தாக்கப்பட்டதாக விசாரணை தகவல் கூறுகிறது.

இந்திய விமானப்படையின் எம் ஐ 17வி5 ரக ஹெலிகாப்டர்கள் மிகவும் உறுதி வாயந்தவை.  உலகெங்கும் பல நாடுகளால் பயன்படுத்தப்படும் இந்த ஹெலிகாப்டர்களில் எவ்வித தொழில்நுட்ப கோளாறுகளும் ஏற்பட்டதில்லை.   இந்த விமானம் கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநக்ர் அருகே உள்ள புத்காம் என்னும் இடத்தில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 6 விமானப்படை வீரர்களும், நிலத்தில் இருந்த பொதுமக்களில் ஒருவரும் மரணம் அடைந்துள்ளனர்.   இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்றது.  இந்த விசாரணையின் போது ஹெலிகாப்டரில் எவ்வித தொழில்நுட்ப கோளாறும் ஏற்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.    விபத்து ஏற்படும் நேரத்தில் இந்திய ஏவுகணை ஒன்று ஏவப்பட்டதால் ஏவுகணை தாக்குதலால் தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர், “பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் அத்து மீறி இந்திய எல்லைக்குள் பறக்கும் போது வலிமையற்ற ஏவுகணைகளை செலுத்தி அந்த விமானங்களை விரட்டி அடிப்பதுண்டு.   அவ்வகையில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரை எதிரி நாட்டை சேர்ந்ததாக கருதி ஏவுகணைகள் செலுத்தப் பட்டிருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இது போன்ற தாக்குதல்கள் தானியங்கி மூலம் நடத்தப்படுவதால் சற்றே வலுவான இந்திய ஏவுகணை தாக்கியதில் விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.    இந்திய விமானப்படை இது குறித்த எந்த ஒரு விசாரணை அல்லது நடவடிக்கைக்கும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.