இந்திய மக்கள் தொகை அதிகரிப்பு எல்லை மீறுகிறதா?

டில்லி

ந்தியாவின் மக்கள் தொகை அதிகரிப்பு குறித்த ஒரு செய்திக் கட்டுரை

இந்திய மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருகிறது. உலகில் அதிக மக்கள் வசிக்கும் நாடான சீன நாட்டின் மக்கள் தொகையை விட இந்திய நாட்டின் மக்கள் தொகை வரும் 2020 மத்தியில் அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஐநா  வின் ஆய்வுகளின்படி இந்திய மக்கள் தொகை வரும் 2060 ஆம் வருடம் 165 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் ஆப்ரிக்கா 2060 ஆம் வருடம் 300 கோடி மக்கள் தொகையை எட்டும் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.

இந்தியப் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் மக்கள் தொகை அதிகரிப்பு குறித்து கவலை தெரிவித்தார். அத்துடன் நாட்டின் வளர்ச்சி  அனைவருக்கும் சென்றடையச் சிறிய குடும்பத்தின் அவசியத்தைத் தனது உரையில் தெரிவித்தார். மக்கள் தொகை பெருக்கம் குறித்து கவலை தெரிவித்த மோடியின் கருத்துக்களை மறுப்பதற்கு இல்லை எனினும் இந்தியாவில் தற்போது பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. தற்போது உலக அளவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 2.1 ஆக உள்ளது.

கடந்த 2011 ஆம் வருட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் 11 மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 2.1 ஆக இருந்தது. மற்ற  மாநிலங்களில் அதைவிடக் குறைவாக இருந்தது. தற்போதைய கணக்கின் படி அந்த விகிதம் 2.1க்கு பல மாநிலங்களில் குறைவாக உள்ளது. நாட்டின் முழு அளவில் கணக்கிடும் போது இந்த விகிதம் 1.8 ஆகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கல்வி என்பதை யாரும் மறுக்க முடியாது. கல்வி வளர்ச்சி அதிகரிக்கும் போது குழந்தைப் பிறப்பு குறைகிறது.

பொதுவாக இந்த 2.1 குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் உலக நாடுகளில் சமமாக உள்ளன. ஆனால் இந்தியாவில் கடந்த 2015-17 ஆம் வருடங்களில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 896 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. எனவே குழந்தை பிறப்பு விகிதம் வருங்காலத்தில் மேலும் குறைய வாய்ப்புள்ளது.