இந்திய வன விலங்குகளுக்கும் கொரோனா ?

கொரோனைவை தடுக்க நாட்டில் ஊரடங்கு போட்டு விட்டோம். விலங்குகள் சரணாலயத்தில் முழு அடைப்பு நடத்த முடியுமா என்ன ?

இப்படி ஒரு கேள்வி வன விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏன்?

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் பெண் புலிக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனால் உலகம் முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவும் இதில் அடக்கம்.

இந்த நிலையில்-

மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேச மாநில எல்லைகளை உள்ளடக்கிய ‘பெஞ்ச் புலிகள் சரணாலய’த்தில் 10 வயதான ஆண் புலி இரு நாட்களுக்கு முன் இறந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் புலிக்கு கொரோனா இருப்பது ஊர்ஜிதம் ஆகியுள்ள நிலையில், இந்த புலி கொரோனாவால் உயிர் இழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

உடல் பரிசோதனைக்கு பிறகே உறுதியான தகவல் தெரியவரும்.

இந்தியாவில் உள்ள புலிகள் சரணாலயங்களில் மொத்தம் 3 ஆயிரம் புலிகள் உள்ளன.

பெஞ்ச் சரணாலயத்தில் புலி இறந்து விட்டதால், இந்தியாவில் உள்ள சரணாலயங்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

– ஏழுமலை வெங்கடேசன்