அண்ணா சிலையை அவமதிப்பதா? தினத்தந்திக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை:

ண்ணா சிலையை அவமதிக்கும் வகையில் கேலிசித்திரம் வெளியிட்டுள்ள  தினத்தந்திக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துஉள்ளார்.

இன்றைய தினத்தந்தி பத்திரிகையில் கொரோனா விழிப்புணர்வு கார்டூனாக  அண்ணா சிலை போன்று படம் வரைந்து அண்ணாவின் தலைக்குப் பதில் கொரோனா வைரஸ் படத்தை  வரைந்து கார்டூன் வெளியிடப்பட்டுள்ளது. இது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  பேரறிஞர் அண்ணாவை அவமதிக்கும் கேலிச்சித்திரத்தை  அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு; ஆனால் வரலாறு தெரியாதவர்கள் பொறுப்பின்றி தலைவர்களையும், இயக்கங்களையும் கொச்சைப்படுத்துவதைத் தடுத்து இதழியல் பண்பாட்டைக் காக்க வேண்டும்!

‘பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை அவமதித்துள்ள தினத்தந்தி நிர்வாகத்தைக் கண்டித்து ஸ்டாலின் தினந்தந்தி அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.